< Back
மாநில செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

தினத்தந்தி
|
30 July 2023 3:28 PM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலானதாக தெரிவித்தனர்.

மேலும் கட்டண தரிசனம் வழியிலும் பக்தர்கள் 2 மணி நேரம் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கட்டண தரிசனம் வழியில் வந்த பக்தர்களுக்கு போதிய குடிநீர் வசதியில்லாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்