< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
2 கன்றுகளை ஈன்ற பசு
|22 Oct 2023 10:56 PM IST
2 கன்றுகளை பசு ஈன்றுள்ளது.
தரகம்பட்டி அருகே உள்ள வீரசிங்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி காளிதாஸ். இவர் ஏராளமான பசுக்களை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஒரு பசு 2 கிடாரி கன்றுகளை ஈன்றது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்த பசுவையும், கன்றுக்குட்டிகளையும் பார்த்து செல்கின்றனர். பசுவும், கன்றுக்குட்டிகளும் நலமுடன் இருப்பதாக காளிதாஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.