< Back
மாநில செய்திகள்
2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கிய பசுமாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கிய பசுமாடு

தினத்தந்தி
|
3 Aug 2023 12:15 AM IST

2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கிய பசுமாடு

முத்துப்பேட்டை பகுதியில் மாடுகள் வளர்போர் வீடுகளில் வைத்து வளர்க்காமல் சாலைகள், தெருக்களில் விட்டு விடுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் சுற்றித்திரிந்த பசு மாடு நேற்றுமுன்தினம் மாலை முத்துப்பேட்டை புதுக்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கி கொண்டது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த நிலைய சிறப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மாட்டை மீட்க நீண்ட நேரம் போராடினர். ஆனால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் செம்படவன்காடு பகுதியிலிருந்து சுவர் உடைக்கும் கருவி கொண்டு வரப்பட்டு வீட்டின் உரிமையாளர் அனுமதியுடன் சுவர் உடைக்கப்பட்டது. நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்