< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ஒரே நேரத்தில் 4 கன்றுகளை ஈன்ற பசு
|13 Oct 2023 12:15 AM IST
திருப்புவனம் அருகே பசுமாடு, ஒரே நேரத்தில் 4 கன்றுக்குட்டிகளை ஈன்றது.
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஆனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். விவசாயி. இவர் சமீபத்தில் சினையுடன் பசு மாடு ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார். அந்த பசுவிற்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கி வந்த 2 நாட்களிலேயே அந்த பசுமாடு, ஒரே நேரத்தில் 4 கன்றுக்குட்டிகளை ஈன்றது. அதில் மூன்று காளை கன்றுகள் ஆகும். ஆனால், பிறந்த உடனேயே பசுங்கன்று இறந்து விட்டது. காளை கன்றுகள் மூன்றும் நன்றாக இருப்பதாகவும், செயற்கை முறை கருவூட்டலில் ஒரே நேரத்தில் 4 கன்றுகளை பசு ஈன்றது அரிதானது என கால்நடை டாக்டர் கோபிநாத், கால்நடை ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் தெரிவித்தனர். பசுமாட்டையும், 3 கன்றுகளையும் அப்பகுதியினர் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.