< Back
மாநில செய்திகள்
கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
அரியலூர்
மாநில செய்திகள்

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 12:40 AM IST

கழிவுநீர் தொட்டியில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த நக்கீரன் என்பவர் வி.கைகாட்டி தேளூர் பகுதியில் மனை வாங்கி புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் அருகே கழிவறைக்கான கழிவுநீர் தொட்டி திறந்த வெளியில் இருந்தது. இதனால் அப்பகுதியில் சென்ற பசு மாடு தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. இது பற்றி அப்பகுதியினர் அரியலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்