< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
18 Nov 2022 12:38 AM IST

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

காரையூர் அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் விழுந்த பசு மாட்டை கயிறு மூலம் உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்