< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
கரூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
13 Oct 2022 1:08 AM IST

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

நச்சலூர் அருகே உள்ள சேப்ளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பொன்னம்பலத்திற்கு சொந்தமான 30 அடி ஆழ கிணற்றில் பசுமாடு கால் தவறி விழுந்து தத்தளித்தது. இது குறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பின்னர் பசுமாடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்