< Back
மாநில செய்திகள்
கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு

தினத்தந்தி
|
6 Jun 2023 12:15 AM IST

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் நடுக்காடு ராமமடத்தடி, பகுதியை சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவருக்கு சொந்தமான மல்லிகைப்பூ தோட்டத்தில் நேற்று அவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து வேதாரண்யம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாவதி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து பசுமாட்டை மீட்டனர். பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்