< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு
|24 Dec 2022 10:06 PM IST
நத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியை சேர்ந்தவர் ராமாயி. இவரது பசுமாடு ஒன்று நேற்று முன்தினம் இரவு பொய்யாம்பட்டி பகுதியில் உள்ள சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த நத்தம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள், கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.