< Back
மாநில செய்திகள்
குட்டையில் தவறி விழுந்த பசுமாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குட்டையில் தவறி விழுந்த பசுமாடு

தினத்தந்தி
|
5 Oct 2023 12:15 AM IST

நாகை அருகே குட்டையில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

சிக்கல்:

சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்ற போது சங்கமங்கலம் ரோட்டில் இடுகாடு பகுதியில் உள்ள குட்டையில் தவறி விழுந்து சேற்றில் சிக்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கீழ்வேளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜ சோழன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் குட்டையில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்