< Back
தமிழக செய்திகள்
கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை
தமிழக செய்திகள்

கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு உயிருடன் மீட்பு

தினத்தந்தி
|
23 Oct 2022 12:45 AM IST

கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு, ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், விவசாயி. இவரது பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பசுமாட்டை கயிற்றின் மூலம் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் கறம்பவிடுதி கிராமத்தை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரது ஆடு 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கறம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்