< Back
மாநில செய்திகள்
எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை - குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை - குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு

தினத்தந்தி
|
4 July 2024 5:58 AM IST

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டனர்.

வேளாங்கண்ணி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜூ. இவரது மகன் ஆண்டோ வர்க்கீஸ் (வயது 34). இவரது மனைவி ஜிஸ்மால் (29). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதற்காக அவர்கள் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளனர். இதனால் அந்த தம்பதி கடன் தொல்லையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி அந்த தம்பதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தனர். அங்கு வந்த அவர்கள், அங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.

குழந்தை இல்லாததாலும், கடன் தொல்லையாலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஆண்டோ வர்க்கீஸ் எலி மருந்தை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் தனது உடலில் செலுத்திக்கொண்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது மனைவி உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனக்கு உறுதுணையாக இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மிகுந்த மனவேதனை அடைந்த ஜிஸ்மால் தனது கணவர் சென்ற இடத்துக்கே தானும் செல்வது என்று முடிவு செய்தார். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து தான் தங்கி இருந்த அறைக்கு திரும்பி சென்று அவரும் அதே ஊசியை எடுத்து தனது உடலில் செலுத்தி உள்ளார். இதனால் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்