< Back
மாநில செய்திகள்
ஆவடி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல்

தினத்தந்தி
|
24 Jan 2023 1:25 PM IST

ஆவடி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

ஆவடியை அடுத்த அரக்கம்பாக்கம் அருந்ததிபாளையம் வள்ளுவர் வாசுகி தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நீலவேணி (23). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று காலை முனியப்பன் வேலைக்கு சென்றுவிட்டார். நீலவேணி தனது 2 மகள்களையும் பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு ஆவடிக்கு சென்று விட்டார். மதியம் இவர்களது குடிசை வீடு திடீெரன தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்துவந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள், குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி, சிலிண்டர், வெள்ளி கொலுசு, 2 கிராம் நகை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்