< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் தடுப்பு சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்து
|18 Dec 2022 4:40 PM IST
திருவொற்றியூரில் தடுப்பு சுவரில் கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் துறைமுகத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று சென்னை துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு மீஞ்சூரில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கன்டெனர் லாரி ஒன்று சென்றபோது, திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள மஸ்தான் கோவில் அருகே நிலைத்தடுமாறி சாலைக்கு நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் செந்தில்குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்குள்ளான லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.