< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம்
|6 July 2022 8:13 AM IST
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.