< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே மோதல்: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே மோதல்: அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

திருக்கோவிலூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அண்ணா நகரில் வசிப்பவர் ராமலிங்கம் மகன் சங்கர்(வயது 35). இவருக்கும் சகோதரரான கார்த்திக்(42) என்பவருக்கும் இடையே சொத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று சொத்து பிரச்சினை தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்தி, அவரது தம்பி ராஜீவ்காந்தி, கார்த்தி மனைவி சத்தியா, ராஜீவ் காந்தியின் மனைவி பிரியா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. பதிலுக்கு சங்கர் மற்றும் அவரது தந்தை ராமலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தி மனைவி சத்யாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்