< Back
மாநில செய்திகள்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
16 Feb 2023 12:52 AM IST

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழுநீக்க நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும் வீடு, வீடாக சென்று தகவல் அளித்து குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு வரவழைத்து, குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 590 குழந்தைகள் மற்றும் 45 ஆயிரத்து 34 பெண்கள் பயனடைய உள்ளனர்.

மேலும் உங்கள் ஊரில் அல்லது உங்கள் தெருவில் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது குறித்தோ, வன்கொடுமை நிகழ்வது குறித்தோ உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் நீங்கள் பயமின்றி, அதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். உங்களுக்கு தகவல் தெரிந்தால் பயமின்றி மாவட்ட கலெக்டரான என்னிடமே செல்ேபான் மூலம் தெரிவிக்கலாம். எனது செல்போன் எண் 94441 75000 ஆகும். மாணவ, மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்தார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் கலெக்டரின் செல்போன் எண்ணை அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்