< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்
|2 Oct 2023 12:11 AM IST
சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
சாராயம் விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம்
பெரம்பலூர், அக்.1-
பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ பொதுமக்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.