< Back
மாநில செய்திகள்
குமரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி மாயம்
மாநில செய்திகள்

குமரிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி மாயம்

தினத்தந்தி
|
18 Jun 2022 9:05 PM IST

ராட்சத அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி,

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் திபின்(வயது23). இவர் வெள்ளமடி உதயா கல்லூரியில் படித்து வருகிறார்.இந்நிலையில் தேர்வு முடிந்ததால் உறவினர்களுடன் சேர்ந்து இன்று மாலை கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார்.

அப்போது திபின் மற்றும் 3 நபர்கள் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள கோவளம் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி திபின் மாயமானார்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்