< Back
மாநில செய்திகள்
தத்ரூபமாக ஓவியம் வரையும் கல்லூரி மாணவர்
நீலகிரி
மாநில செய்திகள்

தத்ரூபமாக ஓவியம் வரையும் கல்லூரி மாணவர்

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

கூடலூரில் தத்ரூபமாக ஓவியம் வரையும் கல்லூரி மாணவரை பேராசிரியர்கள் பாராட்டினர்.

கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிப்பாடியை சேர்ந்தவர் சலாவுதீன். இவர் பஞ்சர் ஒட்டும் கடையை நடத்தி வருகிறார். இவரது மகன் ரின்சாத். இவர் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்து பென்சில் மூலம் பல்வேறு ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து வருகிறார். இதனால் கேரளா மாநிலம் வயநாட்டில் 12-ம் வகுப்பு படித்த நிலையில், மீண்டும் கூடலூருக்கு வந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிறார். ஒரே நேரத்தில் பல ஓவியங்களையும் வரைந்து அசத்தி வருகிறார்.

இதேபோல் கேரளாவில் ரின்சாத் படிக்கும்போது பல்வேறு துறையை சேர்ந்த சிறந்த ஓவியருக்கான விருதை 5 முறை பெற்றுள்ளார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 50 கேடயங்களை வாங்கி குவித்துள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ரின்சாத் படிப்பு முழு செலவையும் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் பிரிவு தலைவர் சண்முகம் ஏற்றுள்ளார். பென்சில் மூலம் தத்ரூபமாக ஓவியங்களை வரையும் மாணவருக்கு, கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டி ஊக்கம் அளித்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்