< Back
மாநில செய்திகள்
வெல்டிங் தொழிலாளியை கரம் பிடித்த கல்லூரி மாணவி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வெல்டிங் தொழிலாளியை கரம் பிடித்த கல்லூரி மாணவி

தினத்தந்தி
|
24 Aug 2022 4:49 PM GMT

முகநூலில் காதல் மலர்ந்தது. வெல்டிங் தொழிலாளியை கல்லூரி மாணவி கரம் பிடித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கிருஸ்பா ஜெபராணி (வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமூக வலைதளமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்தார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார்பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது.

ரமேஷ், வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். முகநூல் மூலம் பழகிய இருவரும் நாளடைவில் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இவர்களின் காதல் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்து வந்தனர். இதனால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி வடமதுரையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பெற்றோர் காதலர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்