< Back
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவி சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவி சாவு

தினத்தந்தி
|
22 Feb 2023 1:59 PM IST

எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவி பலியானார்.

மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு கரையான்மேடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகள் கனிமொழி (வயது 18). இவர், சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று வழக்கம்போல கல்லூரி முடிந்ததும் சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ெரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

மாலை 4 மணியளவில் அந்த மின்சார ெரயில் எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி கனிமொழி, ஓடும் ரெயிலில் இருந்து தவறி கொசஸ்தலை ஆற்றில் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கிய கனிமொழி பரிதாபமாக இறந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மீனவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற எண்ணூர் போலீசார் ஆற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி கனிமொழி மின்சார ெரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து போனாரா? அல்லது அவரே ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்