< Back
மாநில செய்திகள்
சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

தினத்தந்தி
|
26 Feb 2023 2:05 PM IST

சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

கும்மிப்பூண்டி அடுத்த பஞ்செட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்குமார் (வயது 19). இவர் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 22-ந் தேதி கல்லூரி பஸ்சில் ஏறுவதற்காக புவனேஸ்குமார் பஞ்செட்டியில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று புவனேஸ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட புவனேஸ்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக சென்ளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிசிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் புவனேஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலகுப்பம் கிராமத்தில் உள்ள வரசக்தி நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 19). இவர் ரெட்டம்பேடு கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் ரெட்டம்பேடு கிராமத்தில் இருந்து வேலை முடித்து அய்யப்பன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவருடன் அவரது நண்பர்களான சிந்தலகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணா (17) மற்றும் பிரபு (17) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தனர். மோட்டார் சைக்கிளை அய்யப்பன் ஓட்டி சென்றார். இந்த நிலையில், வழுதிலம்பேடு அருகே மோட்டார் சைக்கிள் வரும்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அய்யப்பன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற 2 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்