செங்கல்பட்டு
படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாயே என சகோதரி கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
|படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாயே என சகோதரி கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்கில் தொங்கினார்
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் திரிஷா (வயது 17). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திரிஷா அதிக நேரம் படிக்காமல் டி.வி. மற்றும் செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரது சகோதரி தீபிகா, தங்கை திரிஷாவை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த திரிஷா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கினார்.
சாவு
இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக கீழே இறக்கி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திரிஷா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கிரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.