< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு பயணிகளை  மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்
விருதுநகர்
மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணிகளை மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்

தினத்தந்தி
|
28 Sept 2023 3:38 AM IST

வெளிநாட்டு பயணிகளை கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு கலெக்டர் ஜெயசீலன், சுற்றுலாத்துறை இயக்குனர் உமாதேவி அன்பரசன் ஆகியோர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்தனர். அங்கு வாசலில் நின்று கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்களை வரவேற்று அவர்களுக்கு மாலை அணிவித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். இதில் கோவில் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்