< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சென்னை வாலிபர் பலி
|11 Feb 2023 7:51 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பட்டாபிராம் அடுத்த கரிமேட்டை சேர்ந்தவர் வசந்த் (23). இவர் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள ஆந்திரா நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வசந்த், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.