< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பரிசோதனைக் குழு இல்லாத சோதனைச் சாவடி - பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்
|30 Oct 2022 8:42 AM IST
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோபாலபுரம் சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி,
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக-கேரள எல்லைகளில் சோதனைக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் நிலையில், பொள்ளாச்சி அருகே கோபாலபுரம் சோதனை சாவடியில் மருத்துவக் குழுவினர் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் சோதனைக் குழு தீவிரமாக கண்காணித்து வரும் வேளையில், கோபாலபுரம் சோதனைச் சாவடியில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.