< Back
மாநில செய்திகள்
தொழில்முனைவோருக்கு ரூ.64¼ லட்சம் காசோலை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழில்முனைவோருக்கு ரூ.64¼ லட்சம் காசோலை

தினத்தந்தி
|
15 Dec 2022 1:00 AM IST

கிருஷ்ணகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 16 தொழில்முனைவோருக்கு 30 சதவீத மானியத்தில் ரூ.64 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 16 தொழில்முனைவோருக்கு 30 சதவீத மானியத்தில் ரூ.64 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

சுய தொழில்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம்,

பர்கூர் ஒன்றியங்களை சேர்ந்த 16 தொழில் முனைவோருக்கு சுயதொழில் தொடங்க 30 சதவிகித மானியத்தில் ரூ.64 லட்சத்து 23 ஆயிரத்து 644 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தொழில் முனைவோர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் பர்கூர் ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஊரக பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்குதல், நிதிசேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில்முனைவோருக்கு நிதி சேவை வழங்குவதுடன் 30 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 2 பேருக்கும், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 3 பேருக்கும், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 11 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு பால் உற்பத்தி, பலசரக்கு கடை, இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், அரிசி ஆலை போன்ற சுயதொழில் மேற்கொள்ள 30 சதவீத மானியத்துடன் ரூ.64 லட்சத்து 23 ஆயிரத்து 644 மதிப்பில் காசோலைகள் வழங்கப்பட்டது. எனவே, சுயதொழில் புரிவோர்கள் நல்ல முறையில் தொழில்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், சிவலிங்கம், சிவக்குமார், தொழில் நிதி வல்லுனர் செவத்தான் மற்றும் இளம் வல்லுநர்கள் ஆனந்த், பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்