< Back
மாநில செய்திகள்
கந்தூரி விழாவிற்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கந்தூரி விழாவிற்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை

தினத்தந்தி
|
18 Dec 2022 12:15 AM IST

கந்தூரி விழாவிற்கு ரூ.2½ லட்சத்துக்கான காசோலை

நாகூர் தர்கா கந்தூரி கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் நாகூர் தர்கா நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட தொகையை நாகை முஸ்லீம் ஜமாத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகிறது. அதன்படி 466-வது ஆண்டு கந்தூரி விழாவிற்காக நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலை நாகை முஸ்லீம் ஜமாத்துக்கு வழங்கப்பட்டது. நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி செய்யது காமில் சாஹிப் தலைமையில் தர்கா டிரஸ்டி அறங்காவலர்கள், தர்கா ஆலோசனை குழு தலைவர் முன்னிலையில் நாகை முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்