< Back
மாநில செய்திகள்
தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
அரியலூர்
மாநில செய்திகள்

தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
23 Dec 2022 12:02 AM IST

தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய மருத்துவ தரச் சான்றிதழ் வழங்கும் மருத்துவ குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான பிரசவ அறையில் போதிய வசதி உள்ளதா?, மருந்துகள், மாத்திரைகள் சரியாக உள்ளதா?, கடந்த 2 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் எவ்வாறு அளிக்கப்பட்டது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு போதிய வசதி உள்ளதா? என பல ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மருத்துவ தரச் சான்றிதழ் வழங்கும் அலுவலர் அகமதாபாத் நகரை சேர்ந்த ராஷ்மிசர்மா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குபேந்தரபர் சிங், துணை இயக்குனர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர்கள் மேகநாதன், ஆர்த்தி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்