< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு மத்திய அரசு ஊழியர் பலி
|3 May 2023 8:51 AM IST
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு மத்திய அரசு ஊழியர் பலியானார்.
ஆவடி அடுத்த மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் மைக்கேல் (வயது 56). இவர் ஆவடியில் உள்ள இந்திய விமானப்படையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியஷைலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மைக்கேல் வீட்டிலிருந்து புறப்பட்டு ஆவடிக்கு வந்தார். அப்பொழுது ஆவடிக்கும் அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கும் இடையே ரெயில் தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த புறநகர் மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரெயில்வே போலீசார் உயிரிழந்த மைக்கேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.