< Back
மாநில செய்திகள்
சீர்பாதநல்லூரில்ஒருவாரம் கூட தாக்குப்பிடிக்காத சிமெண்டு சாலை :தரமின்றி அமைத்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சீர்பாதநல்லூரில்ஒருவாரம் கூட தாக்குப்பிடிக்காத சிமெண்டு சாலை :தரமின்றி அமைத்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

சீர்பாதநல்லூாில் ஒருவாரம் கூட சிமெண்டு சாலை தாக்குப்பிடிக்காமல், மண் சாலையாக மாறிவிட்டது. தரமின்றி அமைத்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


மூங்கில்துறைப்பட்டு,

சாலை வசதி சிறப்பாக இருந்தால் தான் தொழில்துறை வளர்ச்சியடையும். அனைத்து வசதியையும் பெற வேண்டும் என்றால் உள்கட்டமைப்புகள் சிறப்பாக இருக்க வேண்டும். அப்போது, வளர்ச்சி என்னும் பாதையில் பயணிக்க முடியும்.

மேலும், கிராமங்களை நகரப்பகுதியோடு இணைப்பதில் சாலைகள் தான் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்னும் பல கிராமங்கள் சாலை வசதி கூட பெறாமல் இருக்கத்தான் செய்கிறது. அதோடு, சில கிராமங்களில் ஏனோதானோ என்று சாலை அமைப்பதால், அதுவும் சில மாதங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. அப்படியான சாலை தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிமெண்டு சாலை அமைப்பு

அதாவது, ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீர்பாதநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களது பிரதான தொழில் விவசாயம்.

இந்த கிராமத்தில் தெற்கு தெருவில் புதிதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இதுவரை சாலை வசதி இல்லாலம் இருந்த தங்களுக்கு, தற்போது சிமெண்டு சாலை கிடைத்துவிட்டது என்று மக்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அவர்களது மகிழ்ச்சி சில நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை. பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, இருந்த இடம் தெரியாத அளவுக்கு பல இடங்களில் பெயர்ந்து போய்விட்டது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமத்தில் விவசாயிகள் அதிகம் இருப்பதால், தங்கள் விளைநிலத்தில் விளைவித்த பொருட்களை நகர பகுதிக்கு வாகனங்களின் எடுத்து செல்ல போதிய சாலை வசதி இன்றி தவிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நடவடிக்கை தேவை

மேலும் செய்திகள்