< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்சில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
மாநில செய்திகள்

அரசு பஸ்சில் டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

தினத்தந்தி
|
1 Oct 2022 6:30 PM IST

கோவை:

கோவை மதுக்கரையில் அரசு பஸ்சில் இலவச பயண சீட்டு வேண்டாம் என கண்டக்டரிடம் மூதாட்டி துளசியம்மாள் தகராறு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து மூதாட்டி உள்பட 4 பேர் மீது மதுக்கரை போலீஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பதிவு குறிப்புடன் தகவல் வெளியானது.

மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்தததாக மதுக்கரை நகர தி.மு.க. செயலாளர் ராமு என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மூதாட்டி மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. காவல்துறையின் பதிவு குறிப்பும் அது கிடையாது. இந்த குறிப்பு சமூகவலைத்தளங்களில் பரவியது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்