< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
சென்னை
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
23 April 2023 1:39 PM IST

கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் புதிய பெண் தாசில்தாராக பிரீத்தி என்பவர் பொறுப்பெற்று உள்ளார். தாசில்தார் அலுவலகத்திற்கு அலுவலக வேலையாக வந்த ஒரு சிலர் பணி செய்யவிடாமல் தாசில்தாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தாசில்தார் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் எளாவூரைச் சேர்ந்த அருள், பெரிய ஓபுளாபுரத்தை சேர்ந்த சத்யா, காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் மற்றும் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த ஆனந்தன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்