< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,179 பேர் மீது வழக்கு
|3 Aug 2022 2:02 AM IST
சேலம் மாநகரில் 2-வது நாளாக ஹெல்மெட் அணியாமல் சென்ற 2,179 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் பகுதியில் 1-ந்தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். தொடர்ந்து ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் 2,992 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக 2,179 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது.