< Back
மாநில செய்திகள்
இரட்டை இலை சின்னத்தை முடக்ககோரி  வழக்கு
மாநில செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை முடக்ககோரி வழக்கு

தினத்தந்தி
|
6 July 2022 7:38 PM IST

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சினையில் சிக்கி உள்ள அதிமுகவின் சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவில் நடவடிக்கை இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை வருகிறது. பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற ஈபிஎஸ் ரூ 5,000 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்