< Back
மாநில செய்திகள்
சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்ட போதே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் - கொந்தளித்த திருமாவளவன்
மாநில செய்திகள்

சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்ட போதே அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் - கொந்தளித்த திருமாவளவன்

தினத்தந்தி
|
8 March 2023 9:37 AM IST

ஊடகங்கள் எப்போதும் தம்மை குறித்தே பேச வேண்டும் என்பதில் அண்ணாமலை கவனமாக இருப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை,

ஊடகங்கள் எப்போதும் தம்மை குறித்தே பேச வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனமாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிறுத்துவதில் மிகவும் குறியாக இருக்கிறார் தமிழ்நாடு அரசியலில் எப்போதும் ஊடகங்கள் தன்னைப் பற்றிய பேச வேண்டும் என்கிற ஒரு வகையான மேனியா அவருக்கு இருப்பதை உணர முடிகிறது.

பரபரப்பாக எதையாவது பேச வேண்டும். அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்ப வேண்டும். தனிநபர் மீதான விமர்சனங்களை கடுமையாக முன்வைக்க வேண்டும் என்கிற யுக்திகளை அவர் கையாண்டு வருகிறார்.

ஏற்கனவே அவர் ராணுவ வீரர்களுக்கு சுட்டுத்தள்ளுங்கள் தமிழ்நாடு பாஜக பார்த்துக் கொள்ளும் என்று கட்டளையிட்டார். அந்தப் பேச்சுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்