< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
|11 Oct 2023 12:24 AM IST
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சியில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காக விவசாயி அம்மையப்பனை, ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அம்மையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியனை தேடி வருகின்றனர். இந்தநிலையில் தங்கப்பாண்டியன் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இதற்கிடையே விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் தங்கப்பாண்டியன் மீது விவசாயியை தாக்கிய வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றி வன்னியம்பட்டி போலீசார் பதிவு செய்தனர்.