< Back
மாநில செய்திகள்
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்கு
கரூர்
மாநில செய்திகள்

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்கு

தினத்தந்தி
|
14 Oct 2023 12:04 AM IST

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி நகை-பணத்தை பறித்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் புகார்

கரூரை சேர்ந்த ஒரு பெண் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பரத் (வயது 36). இவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக (கான்ஸ்டபிள்) பணியாற்றி வருகிறார். இவர் தன்னிடம் திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக பழகி வந்தார்.

பின்னர் என்னிடம் இருந்து 16½ பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்தை பறித்துக் கொண்டு, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி, அவர் கூறும் நபர்களுடன் ெநருக்கமாக இருக்குமாறு மிரட்டுகிறார்.

போலீஸ்காரர் மீது வழக்கு

அப்படி இல்லையென்றால் பரத்துடன் நான் நெருக்கமாக இருந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ்காரர் பரத் மீது பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்