< Back
மாநில செய்திகள்
திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
மாநில செய்திகள்

திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

தினத்தந்தி
|
7 Aug 2024 10:57 PM IST

திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்றும், திருவள்ளுவரை இந்தியாவின் ஆன்மீக குருவாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் செல்வகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் உள்ள பிற மாநில ஐகோர்ட்டுகளிலும் இதேபோன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் என்னவாகும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போன்ற மனுக்களை ஊக்குவிக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்