< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு
|25 May 2022 10:42 PM IST
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு
வெளிப்பாளையம்:
வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயம் இல்லை என அறிவித்து தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நாகை அவுரி திடலில் கடந்த 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்டச்செயலாளர் பூபேஷ் குப்தா உள்ளிட்ட 30 பேர் மீது வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.