< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது வழக்கு
|20 July 2022 2:46 PM IST
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சீபுரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சஞ்சய் (வயது 20) மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை முன்னெடுப்போம் என பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறை அறிவுறுத்தி உள்ளது.