< Back
மாநில செய்திகள்
ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி-டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம்
மாநில செய்திகள்

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி-டாக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
9 July 2022 4:23 AM IST

ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக டாக்டர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆத்தூர்:

ஆத்தூர் ராணிப்பேட்டை ரங்கசாமி தெருவில் டாக்டர் பாலு என்பவருக்கு சொந்தமான குழந்தைகள் மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கான கட்டிட பணிகளை மேஸ்திரி கண்ணன், எலக்ட்ரீசியன் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தில் வேலை செய்த முல்லைவாடி பகுதியை சேர்ந்த காமாட்சி (வயது 74) என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்து அவரது பேத்தி மஞ்சுளா என்பவர் ஆத்தூர் போலீசில் கொடுத்த புகார் செய்தார். அதில், கட்டிடத்தில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் பராமரிப்பு பணிகள் செய்ததால் தனது பாட்டி காமாட்சி இறந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து டாக்டர் பாலு, கட்டிட மேஸ்திரி கண்ணன், எலக்ட்ரீசியன் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்