< Back
மாநில செய்திகள்
தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:47 AM IST

வீட்டை சேதப்படுத்தி தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55). இவரது மனைவி ஜோதி (50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அருணாச்சலத்தின் சித்தப்பா அண்ணாமலை (70). இவரது மகன்கள் மணிகண்டன் (45), வெங்கடேசன் (40). அண்ணாமலை தனது குடும்பத்துடன் அரியலூரில் வசித்து வருகிறார். இந்தநிலையில், அண்ணாமலைக்கும், அருணாச்சலத்திற்கும் வீடு கட்டுவதில் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து குன்னம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காலை 10 மணியளவில் சர்வேயர் சிந்து பிரச்சினைக்குரிய இடத்தை அளவீடு செய்தார். நேற்று மதியம் 12 மணியளவில் மணிகண்டன், வெங்கடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் அருணாச்சலத்திற்கும், அவரது மனைவி ஜோதிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அங்கு கட்டியிருந்த வீட்டின் சுவற்றை இடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்