< Back
மாநில செய்திகள்
ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கரூர்
மாநில செய்திகள்

ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

தினத்தந்தி
|
25 Oct 2023 11:34 PM IST

ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது 59). ஜவுளி வியாபாரி. இவருக்கும், சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (56) என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று தொலைபேசியில் பேசிய லோகநாதன் அனந்தபத்மநாபனை தகாத வார்த்தைகள் கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அனந்தபத்மநாபன் ெகாடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் லோகநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்