அரியலூர்
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
|தா.பழூர் அருகே பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி சாந்தி (வயது 54). இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும், சாந்தியின் மருமகன் கலையரசனுக்கும் இடைேய ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த தனபால் என்பவர் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற கலையரசனிடம் ராமச்சந்திரன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சாந்தியின் வீட்டிற்கு வந்த ராமச்சந்திரன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். ேமலும் இதனை தடுக்க வந்த கலையரசனையும் தாக்கியுள்ளார். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது ராமச்சந்திரன் ஓட்டி வந்த காரால் மோதி சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.