< Back
மாநில செய்திகள்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் மீது வழக்கு
சேலம்
மாநில செய்திகள்

அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் மீது வழக்கு

தினத்தந்தி
|
20 March 2023 4:30 AM GMT

ஓமலூர்:-

பொம்மிடியில் இருந்து ஓமலூருக்கு அரசு பஸ் ஒன்று நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. பூசாரிப்பட்டி பகுதியில் அந்த பஸ்சை ராஜா குபேந்திரன் (வயது 35) என்பவர் வழி மறித்தார். பின்னர் பஸ்சில் ஏறிய அவர் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து கண்டக்டர் செம்மலை (51) கேட்டபோது, குபேந்திரன் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ராஜா குபேந்திரன் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்