கடலூர்
சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது வழக்கு
|ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அப்பகுதியில் கோவிலுக்கு வரவழைத்தார். பின்னர் அந்த சிறுமிக்கு தாலிக்கட்டி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வரவழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் சிறுமிக்கு வயிறு பெரிதாக இருப்பதை அறிந்த அவரது தாய், அவரை சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் இது பற்றி சிறுமி சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.