< Back
மாநில செய்திகள்
எருமப்பட்டி அருகேமதுவிற்ற தொழிலாளி மீது வழக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

எருமப்பட்டி அருகேமதுவிற்ற தொழிலாளி மீது வழக்கு

தினத்தந்தி
|
28 Aug 2023 12:15 AM IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சாலையோரம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எருமப்பட்டியை சேர்ந்த தொழிலாளி சதீஷ் (வயது 40) என்பவர் சாலையோரமாக பையில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்