< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
|24 Aug 2023 1:13 AM IST
நெல்லிக்குப்பம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பண்ருட்டி,
நெல்லிக்குப்பம் அருகே உள்ள பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராக்குப்பத்தை சேர்ந்த ராஜ் மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பாலகுரு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சரண்யாவிடம் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்பேரில் பாலகுரு உள்ளிட்ட 5 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.